புவனேஸ்வர்,
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். அங்கு தலைநகர் புவனேஸ்வரில் அவரை ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் ஒடிசாவில் நேற்று 2-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் புரி மாவட்டத்துக்கு சென்றார்.
அங்கு அவர் பட்டாசித்ரா ஓவியங்கள், பனை ஓலை ஓவியங்கள், மரம் மற்றும் கல் சிற்பங்கள் போன்ற கைவினைப் பொருட்களுக்கு பெயர் பெற்ற பாரம்பரிய கைவினைக் கிராமமான ரகுராஜ்பூர் கிராமத்துக்கு தனது மனைவியுடன் சென்றார்.அதனை தொடர்ந்து தர்மன் சண்முகரத்னம் தனது மனைவியுடன் புரி மாவட்டத்தின் கொனார்க் பகுதியில் உள்ள சூரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.