ஒசூர்: ஒசூர் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடி ஆன்லைனில் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்.1ல் திப்பசந்திரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பு மதுபாட்டில்கள் திருட்டு நடந்துள்ளது. ஹரிஷ் (33), தீனா (24), நாகராஜ் (24), திருசபரி (25), சந்தோஷ் (20), ஆகிய 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ஒசூர் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில் திருட்டு: 5 பேர் கைது appeared first on Dinakaran.