தாரமங்கலம், ஏப்.17: தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் எருக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் அஜீத் (28), லாரி டிரைவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வீட்டிற்கு சென்றபோது சந்தப்பேட்டை பகுதியில், அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன், சிலர் சண்டையில் ஈடுபட்டு இருந்தனர். சண்டையை விலக்கி விட்ட அஜீத், அசோக்கை அழைத்து சென்றார். அப்போது, அவரை வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இரும்பு கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அஜீத், சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை கண்ட இருவரும் தப்பியோடி விட்டனர். அஜீத்தை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார் மணி, முருகன் மற்றும் ஒருவர் என 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சண்டையை விலக்கி விட்டவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.