ஐஸ்கிரீம் கடையில் நூதன முறையில் பணம் திருட்டு: சிசிடிவி பதிவை வைத்து விசாரணை

14 hours ago 2

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (31). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் முதியவர் ஒருவர் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முதியவர் இருக்கும் நேரத்தில் நேற்றுமுன்தினம் கடைக்கு வந்த 2 இளைஞர்கள் அவரது கவனத்தை திசை திருப்பி ரூ.6000 பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

கடை உரிமையாளர் மனோகரன் கடைக்கு வந்து பணத்தை எண்ணி பார்த்தபோது ரூ.6000 குறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பணம் எவ்வாறு காணாமல் போனது என்பதை தெரிந்து கொள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்துப் பார்த்தார். அப்போது இளைஞர்கள் முதியவரின் கவனத்தை திசை திருப்பி கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். இதில் இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஐஸ்கிரீம் கடையில் நூதன முறையில் பணம் திருட்டு: சிசிடிவி பதிவை வைத்து விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article