ஐஸ் உடைக்கும் எந்திரத்தில் மறைத்து ரூ.1.22 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்

5 hours ago 1

திருச்சி,

சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

இதில் அவர் தனது உடைமையில் வைத்திருந்த ஐஸ் உடைக்கும் எந்திரத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. அந்த எந்திரத்தை உடைத்து பார்த்தபோது, அதில் 1.39 கிலோ எடை கொண்ட ரூ.1 கோடியே 22 லட்சம் மதிப்பிலான தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article