ஐயப்பன் அறிவோம் 48: பெருவழிப் பாதை

3 weeks ago 5

முதல் சக்கரம் சொரிமுத்து அய்யனார் கோயிலில் இருந்து புறப்பட்டு 4 சக்கர தலங்களை கடந்து வரும்போது ஒரு மைல்கல்லாக (மனம்) இருப்பது எரிமேலி. இது சபரிமலை பூங்காவனத்திற்கு (பெருவழி பாதை) நுழைவாயிலாக அமைந்துள்ளது. சபரிமலைக்கு ஐந்தாவது சக்கரம் விசுத்தி (பின் கழுத்து பிடரி) எரிமேலி. இந்த எரிமேலி வரலாறு குறித்து மகிஷி வதத்தின் போது பார்க்கப்பட்டு விட்டது.
ஐயப்பன் மகிஷியை வதம் செய்யவில்லை. முன்ஜென்ம தேவிகளின் அம்சமான லீலாவதியின் ஆணவத்தை மட்டுமே அழித்து சாபவிமோசனம் அளித்து மஞ்சமாதாவாக ஆக்கினார்.

எனவே காமம், குரோதம், அகங்காரம் போன்ற மனிதனுக்குள் உள்ள ஆணவத்தை அழிக்கும் தத்துவத்தை உணர்த்தும் விதமாக ஐயப்பன் கையில் வில், அம்பு ஏந்தி வீற்றிருக்கிறார். இதனால் இங்கு தரிசனம் முடித்து பிறகு சபரிமலை நோக்கி 56 கிலோ மீட்டர் பெரும்வழி கடும் மலை பயணம் மேற்கொள்ளும்போது, அனுபவிக்கும் கஷ்டத்தில் மனிதனின் அனைத்து ஆணவமும் அதுவாகவே அழிந்து, இறை சிந்தனை மட்டும் இருப்பதை சத்தியமாக உணரமுடியும்.

ஐயப்பன் தனது பரிவாரங்களுடன் சேர்ந்து போரிடும் போது முதலில் தோல்வியில் முடிந்தது. எனவே கடவுள் அவதாரமாக இருந்தாலும் விரதம் இருக்க வேண்டும் என்ற நியதி இருப்பதால், ஐயப்பனும் விரதம் இருந்து தான் இந்த எரிமேலி காட்டிற்குள் தனது பரிவாரங்களுடன் மாறுவேடத்தில் (கரி பூசி, இழை தழை அணிந்து) ஆட்டம், பாட்டத்துடன் வந்தார். இதனாலேயே மன்னர் ராஜசேகரபாண்டியனும் ஐயப்பன் உபதேசத்தை பின்பற்றி, அகத்தியர் அறிவுரைப்படி ஒரு மண்டலம் விரதம் இருந்த பிறகே எரிமேலிக்கு வருகிறார்.

தான் ஒரு மன்னர் என்பதை துறந்து உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி சாதாரண ஆள் போன்று முகம், உடம்பில் மை பூசி, இலை, தழைகளை அணிந்து கொள்கிறார். எந்தவொரு அடையாளமும் இன்றி சாதி, மதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம், ஆணவம் இன்றி அனைவரும் சாமிமார்களே என்பதை குறிக்கும் விதமாக ‘சாமி திந்தக்க தோம், ஐயப்பன் திந்தக்க தோம்’ என்கின்றார். அதாவது (தத்துவமஸி) ஐயப்பன் எனக்குள்ளேயும் இருக்கிறார், உனக்குள்ளேயும் இருக்கிறார் என்ற பொருளுள்ள ஐயப்பன் துதிப்பா பேட்டை துள்ளி, பேட்டை சாஸ்தாவை வழிபடுகிறார்.

அம்பலபுழாபேட்டை, இறுதியாக ஆலாங்காடுபேட்டையில் பேட்டை துள்ளிய பிறகு இங்கு ஐயப்பனின் அருள்பெற்று, அதன் பிறகு ஐயப்பன் உத்தரவின் படி வாபூரன் என்ற பூதகணங்களின் தலைவன், ஐயப்பன் புலிப்பால் தேடி புறப்பட்ட அந்த பெரியபாதை வழியாக, பெரியானை வட்டம் வரை (பம்பா) மன்னர் ராஜசேகரபாண்டியனை அழைத்துக் கொண்டு செல்கிறார். ஐயப்பனின் பூங்காவனம் என அழைக்கப்படும் பெரிய பாதையில் மன்னர் நடையை துவங்கினார். சாமியே சரணம் ஐயப்பா
(நாளையும் தரிசிப்போம்…)
சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
9.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு

The post ஐயப்பன் அறிவோம் 48: பெருவழிப் பாதை appeared first on Dinakaran.

Read Entire Article