
கொல்கத்தா,
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இப்போட்டியில் இறுதி ஓவரில் சிக்ஸ் அடித்து வெற்றிக்கு உதவிய கேப்டன் எம்.எஸ். தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 100 முறை அவுட் ஆகாமல் இருந்து சி.எஸ்.கே கேப்டன் தோனி போட்டியை முடித்துக் கொடுத்து சாதனை படைத்துள்ளார்.