ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது லக்னோ

1 week ago 8

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) லக்னோவில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை சந்தித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி வலுவான துவக்கம் நடைபெற்றது. குறிப்பாக மிட்செல் மார்ஷ் அதிரடி காட்டினார். 31 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த மிட்செல் மார்ச் விகேன்ஷ் புத்தூர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் மார்க்கரம் 53 ரன்களில் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புகு 203 ரன்களை லக்னோ அணி எடுத்தது.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் வில் ஜேக்ஸ் (5 ரன்கள்), ரியான் ரிகெல்டான் (10 ரன்கள்) அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். எனினும், 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய நமன் திர் அதிரடி காட்டினார். 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இருந்த அவர் திக்வேஷ் ரதி பந்தில் போல்டு ஆனார். அதிரடியாக விளையாடிய சூர்ய குமார் யாதவ் 43 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆகும் போது 23 பந்துகளில் 52 ரன்கள் வெற்றிக்க்கு தேவைப்பட்டது.

முக்கியமான கட்டத்தில் சூர்ய குமார் யாதவ் அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா , முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். மற்றொரு பக்கம் திலக் வர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் லக்னோ அணி கட்டுக்கோப்பான பந்து வீச்சால் மும்பைக்கு நெருக்கடி கொடுத்தது. கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த அணியால் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

Read Entire Article