பெங்களூரு: 18வது சீசன் ஐபிஎல் தொடருக்கான 10அணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய கேப்டனை அறிமுகப்படுத்தி விராட் கோஹ்லி பேசியதாவது: ”ஆர் சி பி அணியின் அடுத்த கேப்டனாக வரப்போகிறவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த அணியை வழி நடத்துவார். எனவே உங்களின் அன்பை வழக்கம் போல் ரஜத் படிதாருக்கு கொடுங்கள். ரஜத் ஒரு பிரமாதமான திறமை உடைய வீரர்.
ரஜத்துக்கு மிகப்பெரிய பொறுப்பு தற்போது காத்திருக்கிறது. அதை ரஜத் சிறப்பாக செய்வார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த சிறப்பான அணியை அவர் முன்னோக்கி அழைத்துச் செல்வார். ஒரு வெற்றிகரமான கேப்டனாக என்ன வேண்டுமோ அது அனைத்தும் ரஜத்திடம் இருக்கிறது. இம்முறை எங்கள் அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். சில வீரர்களை நினைக்கும்போது என்னுடைய எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. பல திறமையான வீரர்கள் அணியில் இருப்பதால் அவர்களுடன் இணைந்து விளையாட நான் ஆர்வமாக இருக்கின்றேன்.
அணியின் வெற்றிக்கு கண்டிப்பாக உதவுவேன். பல ஆண்டுகளாக நான் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டேனோ, அதேபோல் இம்முறையும் செயல்படுவேன். பெங்களூரில் வந்து விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த அழகான நகரத்துக்கு திரும்பி வந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களை பார்க்கும் போது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இங்கு நான் 18 ஆண்டுகளாக வந்து விளையாடுகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறி கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய கேப்டன் ரஜத் படிதார் ”தான் சிறுவயதிலேயே கோஹ்லி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் விளையாடுவதை பார்த்து வளர்ந்தவன். நான் இன்று அந்த அணிக்கு தலைமை தாங்குவதற்கு மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த அணி இது” என்றார்.
The post ஐபிஎல் தொடரில் ரஜத் படிதார் ஆர்சிபி அணியை சிறப்பாக வழிநடத்துவார்: விராட் கோஹ்லி நம்பிக்கை appeared first on Dinakaran.