
அகமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் 35-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.டெல்லி அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. குஜராத் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று 2-வது இடத்தில் உள்ளது
இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.லக்னோ 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.ராஜஸ்தான் 7 ஆட்டத்தில் 2 வெற்றி 5 தோல்வி பெற்று 8-வது இடத்தில் உள்ளது