ஐதராபாத்துக்கு எதிராக பாப் டு பிளெஸ்சிஸின் மாபெரும் சாதனையை சமன் செய்த வெங்கடேஷ்

6 days ago 6

கொல்கத்தா,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 60 ரன்கள் அடித்தார்.

வெங்கடேஷ் ஐயர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அடித்த 3-வது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் ஐதராபாத் அணிக்கெதிராக தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்த பாப் டு பிளெஸ்சிஸின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்த பட்டியலில் சஞ்சு சாம்சன் 4 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதனையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 16.4 ஓவர்களில் 120 ரன்னில் சுருண்டது. இதனால் கொல்கத்தா அணி 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 33 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


Read Entire Article