உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; நடுவர்கள் விவரங்களை வெளியிட்ட ஐ.சி.சி

6 hours ago 1

லண்டன் ,

2023-2025 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.

அதேவேளையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும். இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களின் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, கள நடுவர்களாக நியூசிலாந்தின் கிறிஸ் கேப்னி மற்றும் இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் செயல்படுவார்கள் எனவும், 3வது நடுவராக இங்கிலாந்தின் ரிச்சர்ட் கெட்டில்பரோவும், 4வது நடுவராக இந்தியாவின் நிதின் மேனனும் செயல்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடுவராக (ரெப்ரீ) இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் மேற்பார்வையிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.30.78 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.18.46 கோடியும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


With the stage set for the #WTC25 Final between South Africa and Australia, the match officials have now been announced https://t.co/3BG91mHTD9

— ICC (@ICC) May 23, 2025

 

Read Entire Article