
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஐதராபாத்தில் இருந்து வரும் 31 ஜூன் 7,14,21,28 ஆகிய தேதிகளில் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில்(வண்டி எண்.07193), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 7.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வரும் 26, ஜூன் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில்(07194), இதே வழித்தடம் வழியாக மறுநாள் மாலை 5.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.