ஐசிசி தரவரிசை: பும்ராவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ரபாடா

2 months ago 12

துபாய் ,

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரபாடா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் மிகவும் வேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்தவர் வீரர் என்ற சாதனையையும் ரபாடா படைத்தார். இதனால் 860 புள்ளிகளுடன் ரபாடா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீரர் பும்ரா முதலிடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் . ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் 2வது இடத்தில் உள்ளார் .இந்திய வீரர் அஸ்வின் 4வது இடத்திலும் , ஜடேஜா 8வது இடத்திலும் உள்ளனர்

பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் 20 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

Read Entire Article