துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்தாண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இதில் 8 முன்னணி அணிகள் பங்கேற்றன. இந்தியா பங்கேற்ற போட்டிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக துபாயில் நடத்தப்பட்டன. இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.60 கோடி. இதில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இந்தியா பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக உருவெடுத்தது. லீக் சுற்றுப் போட்டிகளில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளை இந்தியா வெற்றி கண்டது. லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் இந்தியாவுக்கு பரிசாக, ரூ.30 லட்சம் வீதம், ரூ.90 லட்சம் வழங்கப்பட்டது. தவிர, போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் உறுதி செய்யப்பட்ட பரிசுத் தொகையாக, ரூ.1.09 கோடி வழங்கப்பட்டது. மொத்தத்தில் இந்தியாவுக்கு பரிசுத் தொகையாக ரூ.21.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் அதிக ரன்
வரிசை வீரர் ஆட்டம் ரன்
1 ஸ்ரேயாஸ் 5 243
2 கோஹ்லி 5 218
3 சுப்மன் கில் 5 188
4 ரோகித் சர்மா 5 180
5 கே.எல்.ராகுல் 5 140
இந்தியர்கள் அதிக விக்கெட்
வரிசை வீரர் ஆட்டம் விக்கெட்
1 வருண் 3 9
2 ஷமி 5 9
3 குல்தீப் யாதவ் 5 7
4 ரவீந்திர ஜடேஜா 5 5
5 அக்சர் படேல் 5 5
6 ஹர்திக் பாண்டியா 5 4
7 ராணா 2 4
* ரவீந்திர ஜடேஜாவுக்கு இம்பாக்ட் பீல்டர் விருது
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்காக ஆடும் இந்திய வீரர்களில் சிறந்த வீரரை ஒவ்வொரு போட்டியின்போதும் பிசிசிஐ தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. துபாயில் நியூசிலாந்து அணியுடன் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பீல்டிங்கில் கலக்கிய வீரருக்கான, ‘இம்பேக்ட் பீல்டர் விருது’ இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்த விருதை, இந்திய அணி பீல்டிங் பயிற்சியாளர் திலிப் வழங்கினார். இது தொடர்பான வீடியோவை, பிசிசிஐ, எக்ஸ் வலை தளப் பக்கத்தில் நேற்று பகிர்ந்துள்ளது.
* ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் கேப்டன்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள், 1998ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இது வரை, எந்த இறுதிப் போட்டியிலும் ஒரு அணியின் கேப்டனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படவில்லை.
இதற்கு மாறாக, நியூசிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா 76 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்தார். அவரே, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற முதல் கேப்டனாக ரோகித் சர்மா உருவெடுத்துள்ளார்.
* யுவராஜை முந்திய ரோகித், கோஹ்லி
ஐசிசி நடத்தி வரும் போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் அதிக முறை பங்கேற்ற வீரராக, இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் (8 போட்டிகள்) முதலிடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்து அணியுடனான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும், நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியும் 9வது முறையாக பங்கேற்று யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளனர். மற்றொரு இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு, நியூசிலாந்துடனான போட்டி, 8வது இறுதிப் போட்டியாக அமைந்தது. இதன் மூலம், இப்பட்டியலில் 2வது இடத்தை யுவராஜ் சிங்குடன் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
* கோஹ்லிக்கு 550வது போட்டி
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி, இந்திய வீரர் விராட் கோஹ்லிக்கு 550வது போட்டி. இதன் மூலம் அதிக சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற 2வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
* சாம்பியன்ஸ் போட்டியில் கலக்கிய வீரர்கள்
அதிக ரன்
வரிசை வீரர் நாடு ஆட்டம் ரன்
1 ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து 4 263
2 ஸ்ரேயாஸ் அய்யர் இந்தியா 5 243
3 பென் டக்கெட் இங்கிலாந்து 3 227
4 ஜோ ரூட் இங்கிலாந்து 3 225
5 விராட் கோஹ்லி இந்தியா 5 218
அதிக விக்கெட்
வரிசை வீரர் நாடு ஆட்டம் விக்கெட்
1 மேட் ஹென்றி நியூசிலாந்து 4 10
2 வருண் சக்கரவர்த்தி இந்தியா 3 9
3 மிட்செல் சான்ட்னர் நியூசிலாந்து 5 9
4 முகமது ஷமி இந்தியா 5 9
5 மைக்கேல் பிரேஸ்வெல் நியூசிலாந்து 5 8
அதிக பவுண்டரிகள்
வரிசை வீரர் நாடு ஆட்டம் பவுண்டரி
1 ரவீந்திரா நியூசி 4 29
2 பென் டக்கெட் இங்கிலாந்து 3 25
3 ரோகித் இந்தியா 5 21
4 வில்லியம் யங் நியூசி 5 20
5 ஜோ ரூட் இங்கிலாந்து 3 19
6 கேன் வில்லியம்சன் நியூசி 5 19
அதிக சிக்சர்கள்
வரிசை வீரர் நாடு ஆட்டம் சிக்சர்
1 கிளென் பிலிப்ஸ் நியூசி 5 8
2 அசமத்துல்லா ஆப்கான் 3 8
3 இப்ராகிம் ஜார்டன் ஆப்கான் 3 7
4 ரஸ்ஸி டுஸ்ஸன் தெ.ஆ. 3 7
5 ரோகித் சர்மா இந்தியா 5 6
ஒரு ஆட்டத்தில் அதிக ரன்
வரிசை வீரர் நாடு ரன் பந்துகள்
1 இப்ராகிம் ஜார்டன் ஆப்கான் 177 146
2 பென் டக்கெட் இங்கிலாந்து 165 143
3 ஜோஷ் இங்லீஸ் ஆஸி 120 86
4 ஜோ ரூட் இங்கிலாந்து 120 111
5 டாம் லாதம் நியூசி 118 105
6 சுப்மன் இந்தியா 101 129
The post ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் சாம்பியன் இந்தியாவுக்கு ரூ.19.50 கோடி பரிசு: எல்லா போட்டியிலும் வென்ற ஒரே அணி appeared first on Dinakaran.