ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

6 months ago 21

கண்ணூர்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு வந்து சேர்ந்த 2 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து கூடுதலாக தனி வார்டுகளை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு, கேரளா சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார். நிலைமையை பற்றி ஆய்வு செய்வதற்காக மந்திரி தலைமையில், மாநில அளவிலான விரைவு பொறுப்பு குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த இரு நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த தனி நபர்கள் யாருக்காவது அறிகுறிகள் காணப்பட்டால், அதுபற்றி கேரள சுகாதார துறைக்கு தெரிவிக்கும்படியும் மந்திரி வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று, நோயாளிகள் இருவரும் எந்த வழியாக கேரளாவை வந்தடைந்தனர் என்பது பற்றிய வழிகாட்டு குறிப்பு படமும் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Read Entire Article