சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் கடந்த 2023ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இதேபோல், பி.வடமலை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கடந்த 2023 மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இரு கூடுதல் நீதிபதிகளையும் நிரந்தரம் செய்து உச்ச நீதிமன்றம் கொலீஜியம் அறிவித்துள்ளது. நேற்று நடந்த உச்ச நீதிமன்ற கொலீஜிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது உயர் நீதிமன்றத்தில் உள்ள 65 நீதிபதிகளில் 54 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக உள்ளனர். இந்த இரு நீதிபதிகளும் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதால் நிரந்தர நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 9 நீதிபதிகள் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வருகிறார்கள். உயர் நீதிமன்றத்தில் இன்னும் 10 இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு மேலும் 9 நீதிபதிகள் ஓய்வு பெறும் நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மேலும் குறையும். புதிய நீதிபதிகள் ேதர்வு தொடர்பான நடவடிக்கைகளை உயர்நீதிமன்ற கொலீஜியம் விரைவில் எடுக்கும் என்று வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
The post ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் வி.லட்சுமிநாராயணன் பி.வடமலை நிரந்தரம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் அறிவிப்பு appeared first on Dinakaran.