ஐ.பி.எல்.: வெற்றிப்பாதைக்கு திரும்புமா சி.எஸ்.கே..? - டெல்லி அணியுடன் இன்று மோதல்

6 hours ago 2

சென்னை,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 16 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு, குஜராத் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை அணி இதுவரை 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் டெல்லி அணி ஆடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. தொடர் தோல்விகளிலிருந்து மீள சென்னை அணி கடுமையாக போராடும். வெற்றிப்பயணத்தை தொடர டெல்லி போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர் கொள்கிறது. பஞ்சாப் அணி முதல் இரு ஆட்டங்களில் குஜராத், லக்னோ அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது. ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தா அணிகளிடம் வீழ்ந்தது. கடந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது.

கைவிரல் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கடந்த மூன்று ஆட்டங்களில் 'இம்பேக்ட்' வீரராக மட்டும் ஆடிய சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பதுடன் விக்கெட் கீப்பிங் பணியையும் கவனிக்க இருக்கிறார். மொத்தத்தில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க பஞ்சாப் அணியும், வெற்றிப்பாதையில் பயணிக்க ராஜஸ்தான் அணியும் மல்லுக்கட்டும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

Read Entire Article