8 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு திருவிழா... மஞ்சமலை அய்யனார் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்

3 hours ago 2

தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஜமீன்தார்கள் கிராமத்தில் அமைந்துள்ள மஞ்சமலை அய்யனார் ஈரடி கருப்புசாமி கோவில் ஆகும். இந்த கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு உற்சவ திருவிழா வருகின்ற 26-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த உற்சவ விழாவில் சுற்று வட்டார கிராமங்கள் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். இதற்காக அரசம்பட்டி பகுதியில் குதிரைகள், காளைகள், சுவாமி சிலைகள், குழந்தை பொம்மை சிலைகள், பைரவர், இல்லம், ஆட்டோ என 1000-க்கும் மேற்பட்ட சிலைகள் செய்து வர்ணம் பூசப்பட்டு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இந்த சிலைகள் அனைத்தும் திருவிழா நடைபெறும் நாளில் இருப்பிடத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஞ்சமலை சுவாமி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கு காணிக்கையாக வழங்கப்படும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை ஜமீன்தார்கள், வலையபட்டி, அரசம்பட்டி, சல்லிக்கோடாங்கிபட்டி, புதூர், லக்கம்பட்டி கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Read Entire Article