ஐ.பி.எல்.வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ஜெய்தேவ் உனத்கட்

6 days ago 7

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கிளாசென் 71 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 146 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 70 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் அடித்தனர்.

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இது ஐ.பி.எல். கெரியரில் அவரது 100-வது விக்கெட்டாக பதிவானது. இந்த 100 விக்கெட்டுகளை அவர் தனது 106-வது இன்னிங்சில் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் மிக மெதுவாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை உனத்கட் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ஜெய்தேவ் உனத்கட் - 106 இன்னிங்ஸ்கள்

2. வினய் குமார் - 101 இன்னிங்ஸ்கள்

3. ரசல் - 100 இன்னிங்ஸ்கள்

4. உமேஷ் யாதவ் - 99 இன்னிங்ஸ்கள்

5. ஜாகீர் கான் - 98 இன்னிங்ஸ்கள்

Read Entire Article