ஐ.பி.எல். வரலாற்றில் அரிய நிகழ்வு.. சாதனை படைத்த சென்னை - பஞ்சாப் ஆட்டம்

4 hours ago 3

சென்னை,

ஐ.பி.எல். தொடரில், நேற்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 88 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்தார்.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷேக் ரஷீத் - ஆயுஷ் மாத்ரே (சென்னை அணி) பிரப்சிம்ரன் சிங்- பிரியன்ஷ் ஆர்யா ( பஞ்சாப் அணி) ஆகிய 4 வீரர்களும் இந்தியர்கள் மற்றும் சர்வதேச போட்டியில் களமிறங்காதவர்கள்.

இப்படி ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு போட்டியில் களமிறங்கிய இரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும் சர்வதேச போட்டியில் ஆடாத இந்திய வீரர்களாக இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த அரிய நிகழ்வு சென்னை - பஞ்சாப் ஆட்டத்தில் நடந்துள்ளது. 

Read Entire Article