
பெங்களூரு,
கடந்த செவ்வாய்க்கிழமை தொழுகை செய்வதற்காக கர்நாடகா மாநிலம் ஹுப்ளி-ஹாவேரி சாலையில், ஜவேரி அருகே அரசுப் பஸ்சை ஓட்டுநர் ஏ.கே.முல்லா திடீரென பாதி வழியில் நிறுத்தினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டிருந்தார். விசாரணைக்கு பிறகு சம்மந்தப்பட்ட ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்து கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில், காக்கி சீருடையில் பஸ் ஓட்டுநர் பஸ்சின் இருக்கைகளில் தொழுகை நடத்துவதைக் காணலாம், பயணிகள் அவர் வாகனத்தை இயக்குவதற்காகக் காத்திருக்கிறார்கள். இந்த காணொளி பஸ்சின் உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளில் ஒருவரால் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது.