ஐ.பி.எல்.: முன்னணி வீரர் விலகல்.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பலத்த பின்னடைவு

4 days ago 5

ஐதராபாத்,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் ஆன சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் 2 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

அதிரடிக்கு பெயர் போன ஐதராபாத் அணி இம்முறை பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இதனால் எதிர்வரும் போட்டிகள் அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஐதராபாத் அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக இந்திய உள்ளூர் ஆட்டக்காரர் ஆன கர்நாடகாவை சேர்ந்த ரவிச்சந்திரன் ஸ்மரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Welcome aboard, Smaran. He joins our squad as the replacement of Adam Zampa, who is ruled out due to injury. #PlayWithFire | #TATAIPL2025 pic.twitter.com/YC6Xl6u8Kv

— SunRisers Hyderabad (@SunRisers) April 14, 2025
Read Entire Article