ஐ.பி.எல். போட்டி: மெட்ரோ ரெயிலில் இலவச பயணம்

5 hours ago 3

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம். ஐ.பி.எல். போட்டிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தனித்துவமான கியூ ஆர் குறியீட்டை, தானியங்கி நுழைவு எந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். அனைத்து மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரெயில் நள்ளிரவு 1 மணி அல்லது போட்டி முடிந்து 90 நிமிடத்தில் புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article