
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
காயத்தில் இருந்து குணமடைந்துள்ள பும்ரா மும்பை அணியில் களமிறங்கியுள்ளார். பெங்களூரு அணியில் மாற்றமில்லை.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
மும்பை: வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, விக்னேஷ் புதூர்
பெங்களூரு: பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருனால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்