ஐ.பி.எல்.: பெங்களூருக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு

2 days ago 1

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளன. அந்த வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் விரும்பும். ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Read Entire Article