ஐ.பி.எல். பிளே ஆப்: ஆர்சிபி அணியிலிருந்து பில் சால்ட் விலகல்..?

5 hours ago 3

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளன.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றிலிருந்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன பில் சால்ட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிளே ஆப் நடைபெறும் சமயத்தில் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அவர் விலகும் பட்சத்தில் அது பெங்களூரு அணிக்கு பலத்த பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article