
சென்னை,
'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தமிழில் தனுஷ் உடன் 'கொடி', தெலுங்கில், 'கார்த்திகேயா 2' , '18 பேஜஸ்', 'டில்லு ஸ்கொயர்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' படத்தின் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் 'பரதா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனந்தா மீடியா பேனரில் விஜய் டான்கடா, ஸ்ரீனிவாசலு, ஸ்ரீதர் மகுவா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரவீன் கந்த்ரேகுலா இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது.
இந்த படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாதநிலையில், அது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் வருகிற ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.