ஐ.பி.எல். தொடரில் மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான ஷர்துல் தாக்கூர்

1 week ago 4

கொல்கத்தா,

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 238 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நிக்கோலஸ் பூரன் 87 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 239 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 234 ரன்கள் மட்டும் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. கொல்கத்தா தரப்பில் ரஹானே 61 ரன் எடுத்தார்.

லக்னோ தரப்பில் ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் கொல்கத்தா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 13வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரில் தாக்கூர் தொடர்ச்சியாக 5 வைடுகளை வீசினார். ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலர் தொடர்ச்சியாக 5 வைடு வீசியது இதுவே முதல் முறையாகும்.

மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் நேற்று வைடு மூலம் 20 ரன்கள் வழங்கினர். இதில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 8 வைடுகளை வீசினார். இதன் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக வைடு வீசிய பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். 

Read Entire Article