
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 162 ரன் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 41 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 18.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 165 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா 73 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது குருனால் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் முதல் அணியாக வரலாற்று சாதனை ஒன்றை ஆர்.சி.பி. படைத்துள்ளது. அதாவது, ஒரு ஐ.பி.எல். சீசனில் வெளிமைதானங்களில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஆர்.சி.பி (6 வெற்றி) படைத்துள்ளது.