
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த தொடரில் டெல்லி அணி ஒரு ஆட்டத்தில் விளையாடி வெற்றி கண்டுள்ளது.
லக்னோவுக்கு எதிரான அந்த போட்டியில் அசுதோஷ் சர்மா மற்றும் விப்ராஜ் நிகாம் ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக 1 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி திரில் வெற்றி பெற்றது. தொடர்ந்து டெல்லி அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
இந்த தொடருக்கான டெல்லி அணியில் இடம் பிடித்துள்ள கே.எல்.ராகுல் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. கே.எல்.ராகுல் - அதிதி ஷெட்டி தம்பதிக்கு குழந்தை பிறந்ததன் காரணமாக அவர் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் இடம் பெறவில்லை.
இதையடுத்து அவர் எப்போது டெல்லி அணியுடன் இணைவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில், கே.எல்.ராகுல் டெல்லி அணியுடன் இன்று இணைந்துள்ளார். இதன் காரணமாக அவர் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் இடம் பெறுவார் என்பது உறுதியாகி உள்ளது.