
புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். தொடரில், டெல்லியில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் புவனேஸ்வர்குமார் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குருனால் பாண்ட்யா 73 ரன்களும், விராட் கோலி 51 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். குருனால் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த ஆட்டத்தில் அடித்த 51 ரன்கள் மூலம் விராட் கோலி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 2 இமாலய சாதனைகள் படைத்துள்ளார். அவை விவரம் பின்வருமாறு:-
1. ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் (1130 ரன்கள்) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2. டெல்லி அணிக்கெதிராக அதிக முறை 50+ ரன்கள் (11 முறை) அடித்த வீரர் என்ற சாதனையயும் விராட் கோலி படைத்துள்ளார்.