ஐ.பி.எல்.: டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு

4 hours ago 1

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 52 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் கொல்கத்தா இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

அதேசமயம் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட ராஜஸ்தான் அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

Read Entire Article