ஈரானில் 2 நகரங்களில் அடுத்தடுத்து வெடி விபத்து; அதிர்ச்சி சம்பவம்

3 hours ago 3

தெஹ்ரான்,

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரின்போது இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஈரானின் இரண்டு நகரங்களில் இன்று அடுத்தடுத்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஈரானின் மஷ்கத், கியூம் நகரங்களில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மஷ்கத் நகரத்தில் உள்ள பைக் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்திற்கான காரணம், உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Read Entire Article