
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 87 ரன்களும், மிட்செல் மார்ஷ் 81 ரன்களும் அடித்தனர். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 239 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 38 ரன்கள் அடித்திருந்தபோது ஐ.பி.எல். வரலாற்றில் 2,000 ரன்களை கடந்தார். இந்த 2 ஆயிரம் ரன்களை 1,198 பந்துகளில் அடித்துள்ளார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 2 ஆயிரம் ரன்களை குறைந்த பந்துகளில் அடித்த 2-வது வீரர் என்ற வீரேந்திர சேவாக்கின் (1211 பந்துகள்) வாழ்நாள் சாதனையை பூரன் தகர்த்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் ரசல் (1120 பந்துகள்) முதலிடத்தில் உள்ளார்.
அந்த பட்டியல்:-
1. ரசல் - 1120 பந்துகள்
2. நிக்கோலஸ் பூரன் - 1198 பந்துகள்
3. சேவாக் - 1211 பந்துகள்
4. ரிஷப் பண்ட் - 1306 பந்துகள்
5. மேக்ஸ்வெல் - 1309 பந்துகள்