
சென்னை,
ஐ.பி.எல். தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால் எஞ்சிய தொடருக்கு மகேந்திரசிங் தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலம் கழித்து தோனி மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.