ஐ.பி.எல்.: சென்னை சூபர் கிங்சின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஐதராபாத்

1 day ago 3

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு ஐதராபாத்தில் நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் அடித்தார்.. ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 246 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 141 ரன்கள் அடித்து அசத்தினார்.

ஐதராபாத் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் தொடர்ச்சியாக பதிவு செய்த 8-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளது.

சென்னை அணி பெங்களூருவுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றிருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்த சாதனையை சமன் செய்துள்ளது. 

Read Entire Article