அமெரிக்காவில் ரிக்டரில் 5.2 அளவில் நிலநடுக்கம்

1 day ago 3

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சான் டியாகோ அருகே நேற்று ரிக்டர் 5.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சான் டியாகோவின் கிழக்கே உள்ள ஜூலியன் மலை நகரத்திற்கு அருகில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் லேசான பொருட்சேதங்கள் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

Read Entire Article