ஐ.பி.எல்.: சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரர் யார்..? பயிற்சியாளர் தகவல்

1 week ago 4

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

இதன் காரணமாக சென்னை அணியின் புதிய கேப்டனாக மகேந்திரசிங் தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் நேற்று அறிவித்தார்.

இதனால் சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக மாற்று வீரராக இடம்பெற போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஸ்டீபன் பிளெமிங் அளித்த பேட்டியில், " கெய்க்வாட்டுக்கு மாற்று வீரரை பார்க்க வேண்டும். எங்களுடன் சிறிது காலம் இருந்த சில நல்ல வீரர்கள் அணியில் உள்ளனர். எனவே முதலில் உள்ளே இருந்து பார்ப்போம். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அணியை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் பார்க்க ஒரு வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.

Read Entire Article