விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் கவனம் தேவை - நயினார் நாகேந்திரன்

4 weeks ago 7

சென்னை,

சுவர் விளம்பரம் மற்றும் கட்சிக்கான விளம்பரங்களில் பயன்படுத்தும் சொற்றொடர்களில் மிகுந்த கட்டுப்பாட்டையும் கவனத்தையும் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், நாம் வெளிப்படுத்தும் விளம்பர வாசகங்கள் நம் கட்சியையும், கூட்டணியும் பலப்படுத்த அமைய வேண்டுமே தவிர எந்த தனி நபரையும் காயப்படுத்தக்கூடாது என்றும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணி குறித்த, அனைத்து முடிவுகளையும் தேசியத் தலைமை முடிவு செய்து அறிவிப்பார்கள் என்றூம், யாரும் கூட்டணி மற்றும் நம் எதிர்கால ஆட்சி குறித்த கருத்தாக்கங்களை பதிவு செய்யக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Read Entire Article