ஐ.பி.எல்.: கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு

2 days ago 5

முல்லன்பூர்,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 30 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் முல்லன்பூரில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றி , 3-ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் இருக்கிறது.

சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. 

Read Entire Article