ஐ.பி.எல்.: கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

3 hours ago 3

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவது என முடிவு செய்தது. தொடர்ந்து கொல்கத்தாவின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் மற்றும் குர்பாஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் குர்பாஸ் 26 ரன்னிலும், சுனில் நரைன் 27 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 26 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். தொடர்ந்து ரகுவன்ஷி மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர். இதில் ரகுவன்ஷி 44 ரன்னிலும், ரிங்கு சிங் 36 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

தொடர்ந்து ரசல் மற்றும் பவல் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 205 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி விளையாடியது.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய அபிஷேக் 4 ரன்களில் வெளியேறினார். பிளெஸ்சிஸ் 2 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை தன்வசப்படுத்தினார். எனினும், ரின்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கருண் நாயர் (15), கே.எல். ராகுல் (7), ஸ்டப்ஸ் (1), அஷுதோஷ் சர்மா (7), ஸ்டார்க் (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தபோதும் கேப்டன் அக்சர் பட்டேல் 43 ரன்கள் எடுத்தது ஆறுதல் ஏற்படுத்தியது.

இறுதியில் நிகாம் (38) ரன்கள் எடுத்து வெளியேறினார். சமீரா 2 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 9 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 190 ரன்களை எடுத்தது. சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர். இதனால், கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Read Entire Article