ஐ.பி.எல்.: எஞ்சிய போட்டிகளை அங்கே நடத்துங்கள் - இங்கிலாந்து முன்னாள் வீரர் ஆலோசனை

21 hours ago 1

லண்டன்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 12 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இதனிடையே தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஒரு வாரம் கழித்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கான முடிவை எடுப்போம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.பி.எல். தொடரை இங்கிலாந்தில் நடத்துங்கள் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ஆலோசனை கூறியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "இங்கிலாந்தில் ஐ.பி.எல். தொடரை முடிப்பது சாத்தியமா? என்று கேட்டால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எங்களிடம் எல்லா மைதானங்களும் உள்ளன. பின்னர் இந்திய வீரர்கள் அடுத்ததாக நடைபெறும் டெஸ்ட் தொடருக்காக அங்கேயே இருக்கலாம். இது ஒரு யோசனை?" என்று பதிவிட்டுள்ளார். 

Read Entire Article