
முல்லான்பூர்,
ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பிரம்சிம்ரன் சிங் 33 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்கள் அடித்தார்.
இதனையும் சேர்த்து விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் 50+ ரன்கள் அடிப்பது இது 67-வது முறையாகும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. விராட் கோலி - 67 முறை
2. டேவிட் வார்னர் - 66 முறை
3. ஷிகர் தவான் - 53 முறை
4. ரோகித் சர்மா - 45 முறை