ஐ.பி.எல். அல்ல.. மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்.. எந்த தொடரில் தெரியுமா..?

1 week ago 3

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவரது அதிரடி ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு உண்டு. ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் 360' என்றழைப்பர். அந்த அளவுக்கு மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்சர் அடிக்கும் திறமை படைத்தவர். விளையாடிய கால கட்டங்களில் ஏராளமான சாதனைகள் படைத்த இவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

இதனையடுத்து ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அதிலும் கடந்த 2021-ம் ஆண்டோடு விடை பெற்றார். அதன் பின் எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை.

இந்நிலையில் டி வில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் விளையாடும் 'உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்' தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். 

Read Entire Article