மும்பை,
ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன
ஏலத்திற்கு முதற்கட்டமாக 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.
இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட 1574 வீரர்களின் எண்ணிக்கை தற்போது 574 ஆக குறைக்கப்பட்டு இறுதி கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது.
இறுதி கட்ட பட்டியல் விவரம்:-
கேப்டு இந்திய வீரர்கள் - 48
கேப்டு வெளிநாட்டு வீரர்கள் - 193
இணை நாட்டு வீரர்கள் - 3
அன்கேப்டு இந்திய வீரர்கள் -318