ஐ.பி.எல். 2025: பிளே ஆப் போட்டிகளில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

3 hours ago 2

மும்பை,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன.

அடுத்த மாதம் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகளுக்கு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பலரும் இருக்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும், இங்கிலாந்து அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இருப்பதாலும் இரு அணிகளை சேர்ந்த பல வீரர்கள் பிளே ஆப் சுற்றில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மார்கோ ஜான்சன் (பஞ்சாப்), மார்க்ரம் (லக்னோ), ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், கார்பின் போஷ் (மும்பை), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (டெல்லி), ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான் ராயல்ஸ்), ஜேக்கப் பெத்தேல், லுங்கி நிகிடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), ஜாஸ் பட்லர், ககிசோ ரபாடா (குஜராத் டைட்டன்ஸ்) ஆகியோர் ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

Read Entire Article