ஐ.பி.எல்.2025: சென்னை இல்லை.. இந்த 4 அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் - டி வில்லியர்ஸ்

1 month ago 2

கேப்டவுன்,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ள இந்த தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ள அணிகள் குறித்து தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது கணிப்பின் படி, மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிவித்துள்ளார்.

5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை என்று கணித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியமாக அமைந்துள்ளது. 

Read Entire Article