ஐ.பி.எல்.2025: ஆரஞ்சு, ஊதா நிற தொப்பிகளின் நிலவரம் என்ன..?

3 hours ago 1

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 36 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன் முடிவில் அதிக ரன் குவித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன் (368 ரன்கள்) தன்வசம் வைத்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள வீரர்கள் விவரம்:-

1. நிக்கோலஸ் பூரன் - 368 ரன்கள்

2. சாய் சுதர்சன் - 365 ரன்கள்

3. பட்லர் - 315 ரன்கள்

4. ஜெய்ஸ்வால் - 307 ரன்கள்

5. மார்ஷ் - 299 ரன்கள்

அதேபோல் அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா (14 விக்கெட்டுகள்) தன்வசம் வைத்துள்ளார். மற்ற வீரர்கள் சம அளவிலான விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தாலும் சராசரி அடிப்படையில் வரிசை படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள வீரர்கள் விவரம்:-

1. பிரசித் கிருஷ்ணா - 14 விக்கெட்டுகள்

2. குல்தீப் யாதவ் - 12 விக்கெட்டுகள்

3. நூர் அகமது - 12 விக்கெட்டுகள்

4. ஜோஷ் ஹேசில்வுட் - 12 விக்கெட்டுகள்

5. ஷர்துல் தாகூர் - 12 விக்கெட்டுகள்

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரருக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டத்தின்போது இந்த தொப்பி மாறிக் கொண்டே இருக்கும். இறுதிப்போட்டி முடிவில் யார் முதலிடத்தில் இருக்கிறார்களோ? அவர்களை இந்த தொப்பி அலங்கரிக்கும். அத்துடன் தலா ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

Read Entire Article