ஐ.பி.எல்.2025: ஆதிக்கம் செலுத்தும் குஜராத் டைட்டன்ஸ்

4 hours ago 2

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் அடித்தார்.

பின்னர் 199 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் குஜராத் அணி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் ரகானே 50 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் ரஷித்கான், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

8-வது லீக்கில் ஆடிய குஜராத்துக்கு இது 6-வது வெற்றியாகும். 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடருகிறது.

புள்ளி பட்டியலில் மட்டுமின்றி அதிக ரன் குவித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை குஜராத் தொடக்க ஆட்டக்காரர் ஆன சாய் சுதர்சன் (417 ரன்கள்) தன்வசம் வைத்துள்ளார். மேலும் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளருக்கு வழங்க்கப்படும் ஊதா நிற தொப்பியை குஜராத் அணியின் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா (16 விக்கெட்டுகள்) வைத்துள்ளார்.

இப்படி நடப்பு சீசனில் புள்ளி பட்டியல், அதிக ரன் மற்றும் அதிக விக்கெட் என அனைத்து பிரிவுகளிலும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அந்த அணியின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

Read Entire Article